• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்துதல்

- வடமேல், வடமத்திய மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களில் நீர்ப்பாசன நடவடிக்கைகள், குடிநீர் தேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு மகாவலி நீர் வழங்கப்பட்டு இந்த நீரைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதனை மேம்படுத்துவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்கீழ் புதிய அத்துடன் தரமுயர்த்தப்பட்ட நீர் கொண்டு செல்லல், தேக்கி வைத்தில் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்யப்படுவதோடு, இது மேற்போந்த மாகாணங்களின் விவசாய காணிகளின் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதன் மூலம் இந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் நீண்டகால சிறுநீரக நோய்க்கு ஆளாகும் அபாயத்தை தடுப்பதற்கும் காரணமாய் அமையும். மேற்போந்த முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மேல்எலஹர கால்வாய் கருத்திட்டம், வடமேல் கால்வாய் நிருமாணிப்பு கருத்திட்டம், மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புக் கருத்திட்டம் போன்ற முதலீட்டுக் கருத்திட்டங்கள் மூன்றும் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கமைவாக, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் உடன்படிக்கையைச் செய்து கொள்ளும் பொருட்டு கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.