• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு உயர் தரத்திலான அதிசக்தி வாய்ந்த கதிர்வீச்சு கதிரியக்க சிகிச்சை உபகரணங்களையும் உரிய உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதற்கான கருத்திட்டம்

- நாட்டில் துரிதமாக அதிகரித்து வரும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உயர் தரத்திலான அதிசக்தி வாய்ந்த கதிர்வீச்சு கதிரியக்க சிகிச்சை உபகரணங்களை நாட்டின் முக்கிய புற்றுநோய் நிலையங்களில் தாபிப்பது முக்கிய தேவையொன்றாக அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, முதலாம் கட்டத்தின் கீழ் மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனம், கண்டி வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கராபிட்டிய போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகிய ஐந்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான உபகரணங்கள் போன்றவற்றை உலக வங்கியின் உதவியுடனும் இலங்கை நிதியங்களைப் பயன்படுத்தியும் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதிக்குள் கொள்வனவு செய்வதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.