• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொடர்பிலான கொள்கை

- உலகில் அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளில் நிலவும் சுகாதார நிலைமை பற்றிய சுட்டெணுடன் ஒப்பிடும் மட்டத்தில் சுகாதார நிலைமை தொடர்பிலான சுட்டெண் இலங்கையினால் எய்தப்பட்டுள்ளது. ஆயினும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவைகளை மேலும் அபிவிருத்தி செய்யவேண்டிய நிலைமை காணப்படுவதோடு, அண்மைக்காலமாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை நிலைமைகள் அதிகரித்துள்ளமை காணக்கூடியதாக உள்ளதன் காரணமாக துரிதமாக அவசர சிகிச்சை சேவைகளின் தேவை மேலும் அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் பாதுகாப்பு, கௌரவம் பாதுகாக்கப்படும் விதத்திலும் அவர்களுக்கு துரிதமாக தரம்மிக்க நோயாளர் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் தற்போதுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை அலகுகளை விருத்தி செய்தல் அல்லது புதிய பிரிவுகளைத் தாபித்தல் மூலம் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சந்தர்ப்பங்களில் ஊனம் அடையும் நிலைமையை அத்துடன் மரணமடைவதை தடுப்பதற்காக தாமதமின்றி சிறந்த கூட்டிணைப்புடன் விரிவான அத்துடன் பயனுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவையினை வழங்குவது இந்த உத்தேச கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொடர்பிலான கொள்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.