• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பிபிலை சீனி அபிவிருத்திக் கருத்திட்டம்

- பதுளை மாவட்டத்தின் ரிதீமாலியத்த மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பதியதலாவ, மஹாஓயா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் சீனி உற்பத்திற்காக கரும்பு செய்கை பண்ணுதல் அத்துடன் அதற்கு ஒருங்கிணைவாக கலப்பு பயிர்களை பயிரிடுதல், கறவைப் பசு கட்டுப்பாடு, கிளிசீரியா செய்கை, அதன் அப்புறப்படுத்தப் படும் மரத்துண்டுகளைப் பயன்படுத்தி மீள் புதுப்பித்தல் சக்தி போன்ற பிரதான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்ட "பிபிலை சீனி அபிவிருத்திக் கருத்திட்டம்" என்னும் பெயரில் கருத்திட்டமொன்று இந்த பிரதேச விவசாயிகளை இணைத்துக் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.இதன் போது இந்த பிரதேசங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு நிலையான வருமான வழியொன்றை உருவாக்கும் பொருட்டு விவசாயி ஒருவருக்கு சுமார் 2.5 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்று வீதம் வழங்கப்படுவதோடு, விவசாய குடும்பமொன்று மாதமொன்றில் 60,000/- ரூபாவிலிருந்து 80,000/- ரூபா வரையிலான நிலையான வருமானமொன்றை ஈட்டிக் கொள்ளலாமெனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. இதற்கமைவாக, மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.