• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு கொள்கலன் அந்தலைக்காக கொள்கலன் கையாள்கை பாரந்தூக்கிகளைக் கொள்வனவு செய்தல்

- தெற்கு கொழும்பு துறைமுகத்தில் "கிழக்கு கொள்கலன் அந்தலை" என்னும் பெயரில் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான கொள்கலன் அந்தலையொன்றை நிருமாணிப்பதற்கான பணிகளை இலங்கை துறைமுக அதிகாரசபையானது ஆரம்பித்துள்ளது. அதன் சிவில் வேலைகள் முடிவடைந்ததும் தொழிற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான கொள்கலன் கையாள்கை பாரந்தூக்கிகளைக் கொள்வனவு செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.