• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் பூகோள அடையாளத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தைத் திருத்துதல்

- இலங்கைக்கு மாத்திரமே உரியதான உற்பத்திகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள Ceylon Tea, Pure Ceylon Tea, Sri Lanka Tea, Pure Sri Lanka Tea, Ceylon Cinnamon, Pure Ceylon Cinnamon, Sri Lanka Cinnamon, Pure Sri Lanka Cinnamon போன்றவற்றின் உற்பத்தியாளர்களினதும் ஏற்றுமதியாளர்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கும் இந்த வர்த்தகப் பெயரை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் காரணமாக நாட்டிற்கு ஏற்படும் பிரதிகூலமான நிலைமைகளை தவிர்ப்பதற்காகவும் 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தேவையான கட்டளைகளை வழங்குவதற்கும் உரிய திருத்த சட்டங்களை வரைவதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.