• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வலதுகுறைந்த பிள்ளைகளுக்காக லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் விசேட நிகழ்ச்சித் திட்டம்

- பிறப்பிலேயே இருதயத்தில் காணப்படும் கட்டமைப்பு ரீதியிலான பிரச்சினைகள் "பிறப்பு இருதய குறைபாடு" என அழைக்கப்படுவதோடு, இலங்கையில் ஏற்கனவே ஆண்டொன்றில் சுமார் 2,500 - 3,000 குழந்தைகள் பிறப்பு இருதயக் குறைபாடுகளுடன் பிறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுள் 2,000 வரையிலான குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகின்றது. தற்போது வருடாந்தம் சுமார் 900 நோய் நிலையிலுள்ள குழந்தைகள் லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் இத்தகைய அறுவைச் சிகிச்சைகளுக்கு ஆளாவதோடு, இத்தகைய அறுவைச் சிகிச்சைகளின் சிறுஎண்ணிக்கை மாத்திரம் கராபிட்டிய போதனா மருத்துவமனையிலும் ஶ்ரீ ஜயவர்த்னபுர பொது மருத்துவமனையிலும் மேற்கொள்ளப்படுகின்றன. நோய்நிலையிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கான பட்டியலில் உள்ளதோடு, இவர்களில் பலர் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னரே மரணித்தல் அல்லது மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரமுடியாத பிரச்சினைகளுக்கு ஆளாதல் என்பனவும் காணக் கிடைக்கின்றன. இதற்கமைவாக தற்போது இருதய அறுவைச் சிகிச்சைக்காக நீண்ட காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளிக் குழந்தைகளுக்குரிய அறுவைச் சிகிச்சைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கு எடுக்கக்கூடிய மிகப்பயனுள்ள நடவடிக்கையாக லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் றொட்டரிக் கழகம் மற்றும் அதனோடிணைந்த அமைப்பொன்றான "GLI" அமைப்பின் நிதி அனுசரணையுடன் கடமை நேரத்தின் பின்னர் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.