• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மதுசார கட்டுப்பாடு பற்றிய தேசிய கொள்கை

- உலகம் முழுவதுமுள்ள நோய் நிலைமைகளுக்கு முக்கிய காரணியாக மதுசாரப் பாவனை இனங்காணப்பட்டுள்ளதோடு, குறைந்த அத்துடன் குறைந்த நடுத்தர வருமானமுடைய நாடுகளிலிருந்து அறிக்கையிடப்படும் அகாலமரணம் உட்பட குறைபாடுகள் போன்றவற்றிற்கு காரணமாய் அமையும் முக்கிய அவதானமிக்கக் காரணியாகவும் இது பட்டியலிடப்பட்டுள்ளது. அறிக்கையிடப்படுகின்றவாறு இலங்கையில் ஆண்களுக்கிடையில் சிரோசிஸ் மரண விகிதாசாரம் 100,000 பேர்களுக்கு 33.4 ஆகவுள்ளதோடு, இது தொடர்பிலான உலகின் உயர் விகிதாசாரமுமாகும். நாட்டில் நிலவும் உயர் தற்கொலை மற்றும் சுயமாக செய்து கொள்ளப்படும் வதைகள் போன்றவற்றுடனும் மதுசாரம் பிணைந்துள்ளது. அத்துடன் குடும்பங்களுக்கிடையில் காணப்படும் சண்டைகளுக்கும்கூட இது காரணமாய் அமைந்துள்ளது. அதேபோன்று மதுசாரப் பாவனையும் இலங்கையில் நிலவும் ஏழ்மைக்கும் இடையில் உட்சிக்கல் வாய்ந்த தொடர்பும்கூட நிலவுகின்றது. சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சும் தேசிய மனநல சுகாதாரக் குழுவும் அடங்கலாக ஏனைய தரப்பினர்களினால் மதுசாரக் கட்டுப்பாடு பற்றிய பயனுள்ள தேசியக் கொள்கையொன்று இருக்கும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையில் மதுசார கட்டுப்பாடு பற்றிய தேசிய கொள்கைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.