• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புற்றுநோய் தடுப்பும், கட்டுப்பாடும் பற்றிய தேசிய கொள்கை

- அண்மைக்காலமாக இலங்கையில் அறிக்கையிடப்படும் பிரதான நோய் ஒன்றாக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதோடு, 1985 ஆம் ஆண்டில் 100,000 பேர்களுக்கு 37.6 ஆக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டில் 100,000 பேர்களுக்கு 74.2 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைவாக இலங்கையில் புற்றுநோய் அதிகரித்து வருவதை இது காட்டுகின்றது. மார்பக, வாய், தொண்டைநாளம், கருப்பை, நுரையீரல், தைரோயிட், பெருங்குடல், குதவழி, சூலகம் சார்ந்த புற்றுநோயும் லியூகேமியாவும் இலங்கையில் பரவலாக காணக்கிடைக்கும் பத்து புற்றுநோய் வகைகளாகும். புற்றுநோய் கட்டுப்பாடும் தடுப்பும் தொற்றுநோய் அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தும் பரந்துபட்ட நோக்கத்தின் ஒருபகுதியாக இலங்கை தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் சுகாதாரத் திட்டம் 2007 - 2016 மூலம் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட புற்றுநோய் மூலம் நோய்வாய்ப்படுவதன் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் உள்ளடக்கப்பட்ட இலங்கையில் புற்றுநோய்க்கு ஆளாவதைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய கொள்கை மற்றும் திறமுறைத்திட்டம் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.