• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை இறப்பருக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட விலைமுறையொன்றை நடைமுறைப்படுத்தல்

- உள்நாட்டு சந்தையில் தற்போதைய விலை கணிசமான அளவு குறைவடைந்துள்ளமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சருவதேச சந்தையில் நிலவும் விலையினை அடிப்படையாகக் கொண்ட இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைக்குப் பதிலாக உள்நாட்டு சந்தையில் நிலவும் இறப்பர் விலையினை அடிப்படையாகக் கொண்டு உத்தரவாத விலைக்கும் உள்நாட்டு சந்தையில் இறப்பருக்கான விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களுக்குச் செலுத்துவதற்கும் இதற்கமைவாக, இந்த வழிமுறையை 2015 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப் படுத்துவதற்குமாக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: