• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியைத் தாபிப்பதற்கான நடவடிக்கைகளின் தற்போதைய இணக்கப்பேச்சுக்களுக்கு இலங்கையின் பங்களிப்பு

- 2015 ஆம் ஆண்டின் இறுதியில் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் தொடக்க அங்கத்தவராக இதில் சேருமாறு மக்கள் சீனக் குடியரசினால் 2013 திசெம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்திற்குச் செய்த கோரிக்கைகை்கு அமைவாக இதற்குரியதாக நடாத்தப்பட்ட பல்தரப்பு கலந்துரையாடல்களில் இலங்கை கலந்துகொண்டதோடு, தொடக்க அங்கத்தவராக வங்கியில் சேருவதற்கு விருப்பினை தெரிவித்துள்ள 21 நாடுகளுடன் இணைந்து 2014 ஒக்றோபர் மாதம் 24 ஆம் திகதி இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கமைவாக, வங்கி தாபிப்பது தொடர்பிலான விடயங்களை கலந்துரையாடும் சுற்றுகளில் கலந்து கொள்வதற்கு இலங்கையும் கூட தகைமை பெற்றுள்ளதென கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.