• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேர்ச்சி பொருளாதாரத்தை நோக்காகக் கொண்டு இலங்கை எரிசக்தி துறையின் அபிவிருத்தித் திட்டம்

- இலங்கையை நடுத்தர வருமானம் கொண்ட தேர்ச்சி பொருளாதாரம் ஒன்றாக சருவதேச மட்டத்தில் போட்டி ரீதியாக முன்னோக்கிச் செல்லும் அபிவிருத்தி பயணத்திற்குத் தேவையான பலம், எரிசக்தி துறையிலிருந்து ஆகக்கூடுதலாக வழங்குவதை நோக்காகக் கொண்டு இந்த எரிசக்தி அபிவிருத்தித் திட்டம் வகுத்தமைக்கப்பட்டுள்ளது. சூழலைப் பாதுகாத்து உள்நாட்டு எரிசக்தி மூலவளங்களுக்கு முன்னுரிமையளித்து, பிராந்திய ரீதியிலான முரண்பாடுகளைக் குறைத்து, நம்பகத் தன்மையான, தரம் மிக்க இலாபகரமான எரிசக்தி சேவையொன்றை நாட்டின் ஏழை பணக்காரர் என்னும் வித்தியாசமின்றி சகல மக்களுக்கும் ஏற்கக் கூடிய ஆகக்குறைந்த விலைக்கு வழங்குவது இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்த அபிவிருத்தித் திட்டத்தை (2015-2025) நடைமுறைப்படுத்துவதற்காக மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.