• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிகம தென்னைஓலை வாடும் அத்துடன் அழுகும் நோயை தடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம் - 2015

- (Phytoplasma) என்னும் நுண்ணுயிர் மூலம் உருவாகியுள்ள வெலிகம தென்னைஓலை வாடும் அத்துடன் அழுகும் நோயானது தென்னை மரங்கள் அழிந்து போகும் நோயொன்றாகும். இது இலங்கையில் முதற்தடவையாக 2006 ஆம் ஆண்டில் மாத்தறை வெலிகம பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் சார்பில் திட்டவட்டமான நடவடிக்கைமுறை உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நோய் மாத்தறை மாவட்டத்தின் 12 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் 02 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் காலி மாவட்டத்தின் 02 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வியாபித்துள்ளதோடு, இது ஏனைய பிரதேசங்களுக்கும் பரவுவதை தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் உரிய அதிகாரபீடங்களினால் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நோயைக் கட்டுப்படுத்தும் கருத்திட்டத்தை தொடர்ந்தும் 2015, 2016 மற்றும் 2017 ஆகிய மூன்று ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.