• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆயளவை தகவல்கள் கொண்ட தனிநபர் தரவு முறைமையொன்றைத் தயாரித்தலும் இலத்திரனியல் தேசிய ஆள் அடையாள அட்டையொன்றை வழங்கு வதற்குமான ஏற்பாடுகளைச் செய்வதற்காக 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தைத் திருத்துதல் - அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளை உள்ளடக்குதல்

- இலத்திரனியல் தேசிய ஆள் அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கும் ஆயளவைத் தகவல்கள் (கைவிரல் அடையாளம்) கொண்ட ஆட்கள் பற்றிய தரவுகளை தாபிப்பதற்குமான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தைத் திருத்தும் பொருட்டு சட்டவரைநரினால் வரையப்பட்ட சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மக்கள் ஒழுங்கு மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.