• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உமா ஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான வேலைகளின் மீதிப் பணிகள்

- உமா ஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான வேலைகளின் மீதிப் பணிகளுக்காக ஈரான் பராப் கம்பனியுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை தற்போது நடைமுறையிலுள்ளதோடு, ஏற்கனவே கருத்திட்டத்தின் பௌதீக முன்னேற்றம் சுமார் 47 சதவீதமாகும். ஆயினும், 2014 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட பிரதான குகைப் பாதைக்குள்ளான நீர் கசிவு காரணமாக பண்டாரவளை மற்றும் எல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உரிய 06 கிராமசேவகர் பிரிவுகளில் கிணறுகள் வற்றுதல், வீடுகளில் வெடிப்பு ஏற்படுதல், பயிர்ச்செய்கை அழிவடைதல் போன்ற சமூகப் பொருளாதார பிரச்சினைகள் பல உருவாகியுள்ளன. இந்த நிலைமை பற்றி மத்திய சுற்றாடல் அதிகார சபையிடமிருந்தும் இந்த விடயம் சம்பந்தமாக விசேடமாக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவிடமிருந்தும் சிபாரிசுகளைப் பெற்றுக் கொண்டு கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகள் பற்றி தீர்மானமொன்றை எடுக்கும் பொருட்டு பிரதான குகைப்பாதையில் (Head Race Tunnel) நீர் கசிவினை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்காகவும் நிருமாணிப்பின் அபாய நிலையை தவிர்க்கும் பொருட்டும் தேவையான அத்தியாவசிய வேலைகள் தவிர, கருத்திட்டத்தின் பிரதான வேலைகளுக்கான நிருமாணிப்பு 2015‑02‑16 ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த நிபுணர்கள் குழுவினதும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினதும் அறிக்கைகள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளின் மூலம் சிபாரிசு செய்யப்பட்டுள்ள மாற்று வேலைகள் பலவற்றை ஒப்பந்த நிருமாணிப்புக் கம்பனியினால் நிறைவேற்ற வேண்டியுள்ளதோடு, எதிர்காலத்தில் மேற்குறிப்பிட்ட நிலைமைகள் உருவாகாமல் இருக்கும் பொருட்டு தொடர் நடவடிக்கைகளுக்காக வழிமுறையொன்று தயாரிக்க வேண்டியுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, குகைப்பாதையில் நீர் கசிவின் காரணமாக சேதமடைந்துள்ள சுமார் 600 வீடுகளை நிருமாணித்துக் கொடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீரினை தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் மூலம் தடையின்றி வழங்குவதற்கும் நிபுணர்கள் குழுவினாலும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினாலும் செய்யப்பட்டுள்ள சிபாரிசுகளைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கருத்திட்டத்தின் தொடர் வேலைகள் செய்யப்பட வேண்டிய விதம் சம்பந்தமான சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரையும் பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்களையும் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.