• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரசவக் கட்டளைச் சட்டம் மற்றும் கடைகள், அலுவலகப் பணியாளர்கள் பற்றிய (சேவை மற்றும் ஊதியத்தை முறைப்படுத்தல்) சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தம்

- அரசாங்கத் துறையில் சேவை புரியும் பெண் உத்தியோகத்தர்கள் அவர்களுடைய குழந்தைப்பேற்றின் போது அதன் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் வேலைசெய்யும் 84 நாட்கள் கொண்ட லீவு பெறுவதற்கு உரிமை பெறுகின்றனர். இருப்பினும் தனியார் துறையில் சேவைபுரியும் பெண் உத்தியோகத்தர்களுக்கு ஏற்புடையதாகும் பிரசவக் கட்டளைச் சட்டம் மற்றும் கடைகள், அலுவலகப் பணியாளர்கள் பற்றிய சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களின் மூலமும் இரண்டு (02) பிள்ளைப்பேற்றுக்காக மாத்திரம் வேலைசெய்யும் 84 நாட்கள் கொண்ட லீவு பெறுவதற்கு உரிமை பெறுவதோடு, மூன்றாவது பிள்ளைப்பேற்றின் போதும் அதன் பிறகு நிகழும் பிள்ளைப்பேறுகளின் போதும் வேலைசெய்யும் 42 நாட்கள் கொண்ட லீவு மாத்திரம் உரியதாகின்றது. மகப்பேறு உதவிகள் வழங்குவதும் இதற்கமைவாக மாறுபடுகின்றது. அத்துடன், பிரசவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த பெண்களுக்கு பிரசவ உதவியாகக் கிடைப்பது அதன் 3/4 மாத்திரமாகும். ஆயினும், ஏனைய துறைகள் சார்ந்த பெண்களுக்கு பிரசவ உதவிகள் முழுமையாகக் கிடைக்கப் பெறுகின்றன. இதற்கமைவாக அரசாங்க, தனியார் மற்றும் பெருந்தோட்டத்துறையில் சேவை புரியும் பெண்களுக்குப் பிரசவ லீவு வழங்கும் போதும் பிரசவ நலன்கள் செலுத்தப்படும் போதும் காணக்கூடியதாகவுள்ள முரண்பாடுகள் சம்பந்தமாக தொழிற்சங்கங்கள், பல்வேறுபட்ட ஊழியர் குழுக்கள், சருவதேச தொழிலாளர் சங்கம், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்ற சமூகம் சார்ந்த பல்வேறு பட்ட பிரிவினரினால் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சேவை புரியும் பெண் ஒருவரின் உயிருடனான பிரசவத்தின் போது தனியார்துறை மற்றும் பெருந்தோட்டத்துறை ஆகியவற்றில் சேவை புரியும் பெண்கள் சம்பந்தமாக அதுவரை பிரசவித்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கவனத்திற் கொள்ளாது வேலை செய்யும் 84 நாட்கள் கொண்ட லீவு உரிமையை வழங்குவதற்கும் பிரசவ நலவுரிமைகளை வழங்குவதற்குரியதாக பிரசவக் கட்டளைச் சட்டத்திற்கும் கடைகள், அலுவலகப் பணியாளர்கள் பற்றிய (சேவை மற்றும் ஊதியத்தை முறைப்படுத்தல்) சட்டத்திற்கும் திருத்தச் சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.