• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெல்தெனிய மாவட்ட தள வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகள்

- அபிவிருத்தியடைந்துவரும் பிரதேசங்களை குறியிலக்காகக் கொண்டு அடிப்படை சமூகசேவைகள் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் இரண்டாம்நிலை மட்டத்திலான சுகாதார சேவை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய மாவட்ட தள வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டது. இந்த வைத்தியசாலையில் நடைமுறையிலுள்ள அபிவிருத்தி பணிகளுக்கு ஒருங்கிணைவாக மருத்துவமனையில் இயந்திர மற்றும் மின்னணு முறைமையொன்றை தாபிப்பதற்காக 200 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ள மேலதிக தொகையினைப் பெறுவதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.