• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட மாகாண சருவதேச உறவுகள் நிலையத்திற்கான கட்டடத்தொகுதி

- 2014 சனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டுவரும் வடமாகாண சருவதேச உறவுகள் நிலையத்திற்கான கட்டடத்தொகுதியானது நீர், மின்சாரம், தொலைபேசி, மின்னஞ்சல் வசதிகள் உட்பட பல்வேறுபட்ட வசதிகளைக் கொண்டுள்ளதோடு, அதன் சுற்றளவு 113,000 சதுர அடிகளாகும். இதற்கு மேலதிகமாக உள்ளக வீதி முறைமை, பூங்கா, இரண்டு நீச்சல் தடாகங்கள், மின்பிறப்பாக்கி, மின் உயர்த்தி, நீர் சுத்திகரிப்பு இயந்திரம் போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது. ஏற்கனவே இந்தக் கட்டத்தொகுதியின் சுமார் 70 சதவீத வேலைகள் முடிவுற்றுள்ளன. இந்த நிருமாணிப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடானது 1,587.8 மில்லியன் ரூபா ஆவதோடு, இதுவரை செய்யப்பட்டுள்ள நிருமாணிப்புகளுக்காக உறப்பட்டுள்ள செலவு 966.3 மில்லியன் ரூபா ஆகும். இதன் அத்தியாவசியமான மீதி வேலைகளை மாத்திரம் பொறியியல் திட்டத்திற்கு அமைவாக பூர்த்தி செய்து இந்தக் கட்டடத்தை அரச, பகுதி அரச அல்லது வேறு பொருத்தமான நிறுவனமொன்றுக்குக் கையளித்து பொது மக்களின் பயன்பாட்டிற்காக உபயோகிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.