• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மற்றும் கட்டார் இராச்சியத்திற்குமிடையில் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கட்டார் இராச்சியத்திற்குமிடையில் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதில் பின்வரும் துறைகளும் அடங்கலாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு சார்பில் இரு தரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்:

* விசேட தேவையுள்ளவர்களுக்கான விளையாட்டு.
* ஊக்கமருந்து கட்டுப்பாடு.
* விளையாட்டுத்துறை வசதிகளின் முகாமைத்துவமும் பராமரிப்பும்.
* பயிற்சி முகாம்கள்.
* விளையட்டு மற்றும் அதன் அபிவிருத்தி சார்ந்த சகல துறைகளினதும் ஒத்துழைப்பு.
* உடன்பட்ட விளையாட்டுத்துறை சம்பந்தமான பிற ஒத்துழைப்புக்கள்.