• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீயுயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் திருத்த வேலைகள் - இரண்டாம் கட்டம்

- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதி அமைச்சு என்பன நடாத்திச் செல்லப்படும் உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதி 1980 இல் சீன அரசாங்கத்தினால் நிருமாணிக்கப் பட்டதொன்றாவதோடு, இலங்கை அரசாங்கத்தினால் சீன அரசாங்கத்திடம் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அவைமாக 2013/2014 ஆம் ஆண்டுகளில் இதன் திருத்த வேலைகளுக்கான முதலாம் கட்டம் சீன அரசாங்கத்தின் நன்கொடையாக வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதன் இரண்டாவது கட்டமாக பின்வரும் திருத்த வேலைகளை சீனக் குடியரசின் நன்கொடையாக மேற்கொள்ளும் அடிப்படைத் திட்டங்களை தயாரிப்பதற்கு சீன அரசாங்கத்தின் நிபுணத்துவ வடிவமைப்புக் குழுவொன்றை இந்த நாட்டிற்கு அழைப்பதற்கான ஆரம்ப உடன்படிக்கையை சீன அரசாங்கத்துடன் கைச்சாத்திடும் பொருட்டு நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* முழுக் கட்டடத்தினதும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள்.
* மின்சார முறைமையின் திருத்த வேலைகள்.
* வடிகால் முறைமையின் திருத்த வேலைகள்.
* தொலைபேசி முறைமையின் திருத்த வேலைகள்.
* தீயணைப்பு பாதுகாப்பு முறைமையின் திருத்த வேலைகள்.
* குளிரூட்டல் முறைமையின் திருத்த வேலைகள் .