• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 வரவுசெலவுத் திட்ட முன்மொழிபுகளை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலங்கள்

- 2015 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை ஏற்பாடு செய்வதற்காக பின்வரும் சட்டங்களுக்கு உரிய திருத்தங்களைச் செய்யும் பொருட்டு சட்டவரைநரினால் வரையப்பட்ட சட்டமூலங்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:
* உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலம்;
* பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டமூலம்;
* தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (திருத்த) சட்டமூலம்;
* நிதி சட்டமூலம்;
* பொருளாதார சேவைகள் கட்டண (திருத்த) சட்டமூலம்;
* தொலைத்தொடர்புகள் வரி (திருத்த) சட்டமூலம்; அத்துடன்
* பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்த) சட்டமூலம்.