• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம்மிக்க பிரதேசங்களில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளை நிருமாணித்தல்

- தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் அமைவாக மண்சரிவினால் சேதமடைந்த அத்துடன் ஆகக்கூடிய மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் வசிக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களை துரிதமாக பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக, மண்சரிவு அல்லது வீடுகள் தீயினால் எரிந்தமை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மண்சரிவு அபாயம் காரணமாக வேறு இடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டிய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்க செலவில் வீடுகளை நிருமாணிக்கும் பொருட்டு தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் கீழ் 2015 ஆம் ஆண்டில் 300 வீடுகள் நிருமாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.