• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் விளையாட்டுத்துறை மேம் பாட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

- இந்த உடன்படிக்கையின் நோக்கமாவது இருநாடுகளுக்குமிடையில் பரஸ்பர நடவடிக்கை களையும் எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு விளையாட்டுத்துறை ஆராய்ச்சி, அபிவிருத்தி உட்பட தனிசிறப்பு நிலை போன்றவற்றின் ஒத்துழைப்புக்குத் தேவையான செயற்கட்டமைப்பொன்றை தயாரிப்பதாகும். அதில் பின்வரும் துறைகளின்பால் கூடுதல் கவனம் செலுத்தப்படும்:

* குத்துச் சண்டை, கொல்வ், கராத்தே, டைகொண்டோ, மேசைபந்து, கரப்பந்து, பேஸ்போல், ஹொக்கி, ஸ்கொஸ், கிரிக்கட் குழுக்களை பரிமாறிக் கொள்ளல்.

* விளையாட்டுத்துறை பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் உட்பட உத்தியோகத்தர்கள் பரிமாற்றல்.

* விளையாட்டுத்துறை சம்பந்தமான நிகழ்ச்சித்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான உபகரணங்களையும் பொருட்களையும் பரிமாற்றிக் கொள்ளல்.

இதற்கமைவாக, இருநாடுகளுக்கும் இடையில் மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்துகொள்வதற்காக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.