• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
100 நாள் விசேட அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு ஒருங்கிணைவாக நாடுதழுவிய ரீதியில் கிராமங்களைக் கட்டியெழுப்பும் விசேட வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல்

- இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மக்கள் பங்களிப்புடன் முழுநாட்டினையும் தழுவி 14,023 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளிலுள்ள 36,822 கிராமங்கள் கட்டியெழுப்பப்படவுள்ளன. இந்த கருத்திட்டங்களை இனங்காணுதல், திட்டமிடுதல், நடைமுறைப்படுத்தல், மேற்பார்வை செய்தல், தொடர் நடவடிக்கைகளை, எடுத்தல், அவற்றின் முகாமைத்துவம், பராமரிப்பு போன்றவற்றிற்கு மக்களின் பங்களிப்பினை நேரடியாக பெற்றுக் கொண்டு தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டிற்கு மக்களை நேரடியாக பங்குபற்ற செய்விக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபா வீதம் வழங்கப்படுவதோடு, கருத்திட்டமொன்றுக்காக எதிர்பார்க்கப்படும் 25 சதவீதமான சமூக பங்களிப்புடன் கிராமமொன்றுக்கு 1.25 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க கருத்திட்டமொன்று உரியதாகும். மேற்போந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் மாண்புமிகு சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.