• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை இறப்பருக்கான சான்றுபடுத்தப்பட்ட விலைமுறையொன்றை நடைமுறைப் படுத்தல்

- புதிய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்திலுள்ள பிரேரிப்பொன்றாவது சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை பச்சை இறப்பருக்கு 350/- ரூபாவைக் கொண்ட உத்தரவாத விலைமுறையொன்றை நடைமுறைப் படுத்துவதாகும். இந்த பிரேரிப்பு நிதி அமைச்சர் 2015‑01‑29 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்ட முன்மொழிபுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இறப்பர் துறையை பிரதிநிதித்துவப் படுத்தும் சகல தரப்புகளையும் சார்ந்த அமைப்புகளின் உடன்பாட்டின் பிரகாரம் சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை பச்சை இறப்பருக்காக பிரேரிக்கப்பட்டுள்ள சான்றுபடுத்தப்பட்டுள்ள விலைமுறையை 2015‑03‑15 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.