• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போதைப்பொருள், நேர்மாறான பொருள் உட்பட அவற்றின் இரசாயன முற்பாவனை தொடர்பில் சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிராக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பாகிஸ்த்தான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

- இலங்கைக்கும் பாகிஸ்த்தானுக்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்தும் பொருட்டிலான கலந்துரையாடல்கள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, போதைப்பொருள், நேர்மாறான பொருள் உட்பட அவற்றின் இரசாயன முற்பாவனை தொடர்பில் சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிராக இருநாடுகளும் ஒத்துழைப்பினைப் பலப்படுத்தும் பொருட்டு மிகக் கவனம் செலுத்தியுள்ள துறையொன்றாகும். இதற்கமைவாக போதைப்பொருள், நேர்மாறான பொருள் சம்பந்தமான குற்றங்களின் கடுமையான தன்மையை அத்துடன் அதனால் சமூகத்திற்கு ஏற்படும் பாரிய விளைவுகள் போன்றவற்றை குறைத்துக் கொள்ளும் நோக்கில் இலங்கை்கும் பாகிஸ்த்தானுக்கும் இடையிலான மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமை மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.