• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கப்பல் மேற்பார்வை முறைமைகளைத் தாபித்தல்
- இலங்கையில் மீன் வளத்தை ஐரோப்பா சங்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கிக் கொள்ளல் போன்ற மீன்பிடித்துறையில் உள்ள பிரச்சினைகள் பற்றி மீனவ சமூகத்தினரின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கி, இல்லாமற் போன அன்னிய செலாவணியை நாட்டிற்காக பெற்றுக் கொள்வதற்கும் இந்துசமுத்திர டூனா ஆணைக்குழுவினதும் ஐரோப்பா சங்கத்தினதும் அவதானிப்புரைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இல்லாமற் போன ஐரோப்பிய சந்தையை மீள பெற்றுக் கொள்வதற்கும் ஏற்புடையதான துரித நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 1,500 மீன்பிடி கப்பல்களில் தாபிக்கும் பொருட்டு 1,500 கப்பல் மேற்பார்வை முறைமைகளை கொள்வனவு செய்வதற்கும் இந்த முறைமைகளை கட்டணங்கள் அறவிடாது மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் 2015 ஆகஸ்ட் மாதமளவில் இந்த செயற்பாட்டினை பூர்த்தி செய்வதற்குமாக உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.