• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள நிருவாக முறை
- புதிய நிருவாக முறையின் கீழ் இரட்டைக் குடியுரிமை வழங்கும் பொருட்டு மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமை மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக பின்வரும் தகைமைகளுள் ஆகக்குறைந்தது ஒரு தகைமையையாவது பூர்த்தி செய்யும் ஆள் ஒருவருக்கு இரட்டை குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

* தொழிற் தகைமை அல்லது கல்வித் தகைமையின் மீது.

* இலங்கையில் 2.5 மில்லியன் ரூபாவுக்கு அல்லது அதற்கு கூடுதலான பெறுமதி மிக்க நிலையான சொத்துக்களின் உரிமை இருத்தல் மீது.

* இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியன் அல்லது அதற்கு கூடுதலான தொகையொன்றை மூன்று (03) வருட காலத்திற்கு நிலையான வைப்பொன்றினை செய்வதன் மீது.

* இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியொன்றிலே NRFC/RFC/SFIDA கணக்கில் 25,000 யு.எஸ். டெபலர்கள் அல்லது அதற்கு கூடிய தொகை மூன்று (03) வருட காலத்திற்கு நிலையான வைப்பாக பேணப்படுவதன் மீது.

* திறைசேரி பிணையங்கள் அல்லது பிணையங்கள் முதலீட்டு கணக்கொன்றில் 25,000 யு.எஸ். டெபலர்கள் அல்லது அதற்கு கூடிய தொகை மூன்று (03) வருட காலத்திற்கு முதலீடு செய்வதன் மீது.

* 55 வயதினை பூர்த்தி செய்வதன் மீது.

தகைமை பெறும் விண்ணப்பதாரரின் வாழ்க்கைத்துணை அல்லது 22 வயதிற்கு குறைந்த திருமணமாகாத குழந்தைகளும்கூட தகைமை பெறுவர்.