• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் புலம்பெயர் ஊழியர்களுக்கான உத்தேச நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டம்
- அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சினால் புலம்பெயர்ந்து தொழில் செய்யும் ஊழியர்களுக்கான நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டமொன்று மகளிர் அலுவல்கள் அமைச்சுடனும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சுடனும் ஒத்துழைப்புடனும் பங்களிப்புடனும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை பற்றி வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மாண்புமிகு (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டம் பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படும்:

(i) புலம்பெயர் ஊழியர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் செய்யப்படும் நலனோம்பல் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்;

(ii) வெளிநாட்டுக்குச் சென்றதன் பின்னர் அவர்கள் சார்பில் நடைமுறைப் படுத்தப்படும் நலனோம்பல் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்;

(iii) வெளிநாட்டுத் தொழிலை முடிவு செய்து நாட்டிற்கு திரும்பியதன் பின்னர் அவர்கள் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள்; அத்துடன்

(iv) புலம்பெயர் ஊழியர்களின் குடும்பங்களுக்காக செய்யப்படும் நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்கள்.