• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 ஆம் ஆண்டு சார்பில் பாடசாலைப் புத்தகங்களை அச்சிடுதல் - அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட ஐக்கிய பத்திரிகைக் கம்பனி அரசாங்க அச்சகத் திணைக்களம்

- பாடசாலை புத்தகங்களை அச்சிடும் போது அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வரையறுக்கப்பட்ட ஐக்கிய பத்திரிகைக் கம்பனி மற்றும் அரசாங்க அச்சகத் திணைக்களம் போன்ற அரசாங்க நிறுவனங்களின் அச்சடிக்கும் ஆற்றல் உட்பட கடந்த ஆண்டுகளில் காட்டிய வினைத்திறமை முதலியவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணிகளை இந்த நிறுவனங்களுக்கு கையளிப்பதற்காக வெகுசன ஊடக, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .