• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொரளையில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றும் திட்டம் - கட்டம் II

- செலவுமதிப்பீட்டு பரிசோதனைக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் பொரளை ஆயுள்வேத வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்த செலவை 728 மில்லியன் ரூபாவிலிருந்து 1,113 மில்லியன் ரூபா வரை திருத்துவதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .