• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியின் மீது செயற்படுத்தப்படும் பாரிய கொழும்பு நீர், கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம்

- கொழும்புநகர பொறியியல் எல்லைக்குள் உள்ள தற்போதைய நீர்வழங்கல் முறையை புனரமைப்பதற்கும் வருமானம் கிடைக்கப் பெறாத நீரை குறைப்பதற்குமாக இரண்டு கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் உத்தேச கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .