• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுநீரக நோய் தொடர்ந்தும் அதிகரிப்பதை தடுத்தலும் ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்குமான நலனோம்பலும்

- இந்த விடயம் சம்பந்தமாக 2015‑02‑11 ஆம் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழான அமைச்சரவை உபகுழுவின் கட்டமைப்பை பின்வருமாறு விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது:

* சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்;
* நிதி அமைச்சர்;
* நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் அமைச்சர்;
* நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்; * கல்வி அமைச்சர்;
* சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி அமைச்சர்;
* வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர்;
* உணவு பாதுகாப்பு அமைச்சர்;
* அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சர்; அத்துடன்
* வெகுசன ஊடக, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்.

அதேபோன்று சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்திற்குரியதாக பின்வரும் தீர்மானங்களும்கூட எடுக்கப்பட்டன:

* நாடு தழுவிய ரீதியில் நோயாளிகளுக்கான சிகிச்சையளிப்பு நடவடிக்கைகளை மிக வினைத்திறனுடன் நிறைவேற்றுவதும் நோயை தடுப்பதற்கான பணிகளை முகாமிப்பதும் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் கையாளப்படுதல்.

* சிறுநீரக நோயாளிகளுக்குத் தேவையான சகல நலனோம்பல் நடவடிக்கைகளை சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்கொள்தல் .

* சிறுநீரக நோய் கடுமையாக பரவும் பிரதேசங்களில் நிருமாணிக்கப்பட்டு வரும் மீள் சுத்திகரிப்பு நீர் வடிகால் நிருமாணிப்புகள் வேலைத்திட்டத்தை நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்துதல் உட்பட மேற்பார்வை செய்தல்.

* சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அரசி உற்பத்திக்குத் தேவையான பாரம்பரிய உள்நாட்டு நெல் வகையை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் அமைச்சினால் நடைமுறைப்படுத்துதல்.

* இந்த அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களினதும் பணிகளை ஒருங்கிணைப் பதற்காக சனாதிபதி செயலகத்தின் கீழ் ஒருங்கிணைப்புப் பிரிவொன்றைத் தாபித்தல் முக்கியமாக நோய் தடுப்புக்குரிய பணிகளை கையாளுதல் தொடர்பில் அனுபவமுடைய ஆற்றல் மிக்க ஒருவரை சனாதிபதியின் செயலாளரினால் இந்த ஒருங்கிணைப்புப் பிரிவின் தலைவராக நியமித்தல்.

* அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழுள்ள அமைச்சரவை உபகுழுவுக்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு இயைபுள்ள அமைச்சுக்களின் சிரேட்ட உத்தியோகத்தர்களையும் இந்த துறைசார்ந்த நிபுணர்களையும் கொண்ட குழுவொன்றை நியமித்தல்.