• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேர்தல் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல்

- நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடவடிக்கையொன்று பற்றி பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பொருட்டு தேசிய தேர்தலொன்றை மீள நடாத்துவதற்கு முன்னர், 2015 சனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் அதன் பின்னரும் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ள அரசாங்க ஊடகங்களின் பிழையான பாவனை, பொது சொத்துக்களை தேர்தல் பணிகளுக்காக முறைக்கேடாக பயன்படுத்துதல், அரசாங்கத்தின் பிழையான நிதி பாவனை, அரசாங்க உத்தியோகத்தர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துதல், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் மீறப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் சம்பந்தமாக கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை துரிதமாக விசாரிப்பதற்கும் வெ ளிக்கொணரப்படும் தேர்தல் முறைகேடுகள் பற்றி பொருத்தமான நீதிமன்ற நடவடிக்கைகளையும் ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் ஆரமப்பிப்பதற்குத் தேவையான விதிமுறையான, வினைத்திறன்மிக்க அத்துடன் வெ ளித்தெரியும் பொறிமுறையொன்றை தாபிக்கும் பொருட்டு சட்டம், நிருவாகம், தேர்தல், நிதி மற்றும் புலனாய்வு முதலிய விடய துறைகளில் ஆற்றல் மிக்கவர்களைக் கொண்ட "தேர்தல் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்றை" தாபிப்பதற்கும் இந்தக் குழுவின் அறிக்கையை60 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும் பொருட்டிலுமான அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.