• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிமேதகைய சனாதிபதி அவர்களின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம்

- நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவருடைய முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேற்கொண்ட தனது உத்தியோகபூர்வ விஜயம் மிகவும் வெற்றிகரமானதெனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நட்புறவு மற்றும் ஒத்துழைப்பினை மேலும் விருத்தி செய்வதற்கு இது ஏதுவாய் அமைந்ததெனவும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது இந்தியாவின் அதிமேதகைய சனாதிபதி, அதிமேதகைய பிரதம அமைச்சர் முன்னாள் பிரதம அமைச்சர் உட்பட பல தலைவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் நான்கு (04) புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாகவும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோன்று வரும் மார்ச் மாதத்தில் இந்தியாவின் அதிமேதகைய பிரதம அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளா ரெனவும் 1987 ஆம் ஆண்டின் பின்னர் இந்திய அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.