• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழ்க்கைச் செலவு மற்றும் உணவு பாதுகாப்புத் தொடர்பிலான குழுவின் சிபாரிசு

- குறைநிரப்பு வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக கிடைக்கவேண்டிய நலன்கள் நுகர்வோருக்குக் கிடைக்காமை பற்றி கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, இதற்கான பொறிமுறையொன்றை வகுத்தமைத்து நடைமுறைப்படுத்துவதற்காக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்குப் பணிப்பு விடுப்பதற்கும் குறைக்கப்பட்ட விலைகள் பற்றி பொது மக்கள் அறிந்துகொள்வதற்காக இந்த நிறுவனத்தினால் வர்த்தமானி ஊடாக பிரசித்தப்படுத்துவதற்குமாக உணவு பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினாலும் அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.