• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் இலக்கம் 2518 SRI - தூயசக்தி மற்றும் மின்சார வலையமைப்பு வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம் - பகுதி 2 - அணுப்பீட்டு வலையமைப்பைப் பலப்படுத்தல் - அணுப்பீட்டுக் கம்பிகள் - ICB No. CEB/AGM/ TR/2009/ICB/003 விலை அதிகரிப்புக்கான மேலதிக ஒப்பந்தத் தொகையை வழங்குதல்

- மேற்போந்த ஒப்பந்தத் தொகை கேள்விகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் கணியப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப் பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் நிபந்தனைகளக்கு அமைவாக கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளது நிருமாணிப்புகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் செய்யப்பட்ட உண்மையான வேலைப் பகுதிகளின் அளவுகளை கணக்கிட்டுப் பார்த்தாகும். கருத்திட்டம் நடைமுறையில் உள்ளதோடு, மெற்கொள்ளப்பட்ட மேலதிகப் பணிகளின் பெறுபேறாக கோபுரவகை, கோபுரஅளவு, அத்திவாரம் நிருமாணித்தல் போன்ற பணிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அதிகரித்த ஒப்பந்தத்தொகையை உரிய ஒப்பந்தக்காரருக்கு வழங்கும் பொருட்டு செலவு மதிப்பீட்டு பரிசோதனைக் குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு உரிய விலைமாற்றத்தை அங்கீகரிப்பது சம்பந்தமாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.