• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வீடமைப்புத் திட்டங்கள் நிருமாணிக்கப்பட்டுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள்

- காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 271 ஏக்கர் 2 றூட் 38.4 பேர்ச்சஸ் விஸ்தீரணமுடைய 34 காணிகளின் உரிமை தற்போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரசபையினால் பொறுப்பேற்றி ருந்தாலும் அவற்றின் உரிமை தேசிய வீடமைப்பு அபவிருத்தி அதிகாரசபைக்கு கிடைக்காததன் காரணமாக இந்த காணிகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நிருமாணிக்கப்பட்டுள்ள 748 வீடுகளில் வதிந்துள்ளவர்களுக்கு அந்நத வீடுகளுக்கான சட்டபூர்வ உரிமைகிடைக்கவில்லை. ஆதலால், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேலே குறிப்பிட்ட 34 காணிகளிலும் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு குறித்த வீடுகளில் சட்டபூர்வமான உரிமையை வழங்குவதற்கு இந்தக் காணிகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்வதற்காக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் மாண்புமிகு சஜித் பிரேமதாச அவர்களினால் பிரேரிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக எவ்வித அறவீடுகளுமின்றி காணி உடைமைமாற்ற முடியாமையினால் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி மிக சலுகை அடிப்படையிலான விலைக்கு இயைபுள்ள காணிகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.