• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு பாதுகாப்பு தொழிற்பாட்டு கூடத்தை தாபித்தல்

- அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சனாதிபதி தேர்தல் கொள்கை பிரகடனத்தின் மூலம் “உணவு பாதுகாப்புடன் நிலைபேறுடைய கமத்தொழில்” என்பது முன்னுரிமை துறையொன்றாக கண்டறியப்பட்டுள்ளதோடு, பொருத்தமான கொள்கை ரீதியிலான செயற்பாட்டின் உடாக பிரதான உணவு சந்தையை ஒழுங்குறுத்தும் பொருட்டு உணவு உற்பத்தி மற்றும் இறக்குமதி தொடர்புபட்ட புள்ளிவிபரங்களைத் சேகரித்தல், திரட்டுதல், புலனாய்வு செய்தல் முதலியவற்றை நோக்கமாகக் கொண்டு "உணவு பாதுகாப்பு தொழிற்பாட்டுக் கூடம்" என்பதனை இந்த அமைச்சில் தாபிப்பதற்காக உணவு பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. நாட்டில் உணவு பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் திறமுறைகள் சம்பந்தமான தகவல்களை வழங்கும் மத்திய நிலையமாக இது மாறுமென எதிர்பார்க்கப்படுகின்றமை பற்றி அமைச்சரவையினால் மேலும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.