• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிபாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காணிகளையும் சொத்துக்களையும் விடுவித்தல்

- யுத்த காலப்பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 11,639 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியிலிருந்து பெருமளவிலான காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதோடு, பலாலி பிரதேசத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இலங்கை தரைப்படையினதும் விமானப்படையினதும் கட்டுப்பாட்டின் கீழ் 6,152 ஏக்கர் நிலப்பிரரேசம் அதிபாதுகாப்பு வலயமாகப் பேணப்பட்டு வருகின்றது. இந்த அதிபாதுகாப்பு வலயயத்திலிருந்து மேலும் 1,000 ஏக்கரை கட்டம்கட்டமாக விடுவிப்பதற்கும் இதன் முதலாவது கட்டமாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் ஜே 284-வளலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 220 ஏக்கரை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 1,022 குடும்பங்களை மீள குடியமர்த்துவதற்காக மாதிரிக் கிராமமொன்றைத் தாபிப்பதற்காக விடுவிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் கீழ் குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச்சஸ் காணித் துண்டும், வீடு நிருமாணிப்பதற்காக உதவியும் வழங்கப்படவுள்ளதோடு, பாடசாலை, முன்பள்ளி, வைத்தியசாலை, மத வழிபாட்டுத்தலங்கள், சனசமூக நிலையங்கள் உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் நிருமாணிக்கப்படவுள்ளன. விடுவிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள மீதி 780 ஏக்கரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதற்காக பயன்படுத்தும் பொருட்டு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிழக்கு மாகாணத்தின் பானம பிரதேசத்தில் விமானப் படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள காணிகளிலிருந்து ஏற்கனவே நிருமாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடத்திற்கு அருகாமையிலுள்ள 25 ஏக்கர் நிலப்பிரதேசத்தைத் தவிர, மீதிக் காணியை இந்த பிரதேசத்தைச் சேர்ந்த காணியில்லாதோருக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு சனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் அதிபாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள கட்டடங்களையும் அலரி மாளிகைக்கு அருகாமையில் உள்ள தற்போது பாதுகாப்பு பிரிவின் பொறுப்பில் உள்ள கட்டடங்களையும் விடுவிப்பதற்கும்கூட மேலும் தீர்மானிக்கப்பட்டது.