• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 2014/2015 பெரும்போகத்தின் போது அரசாங்க நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு செய்தல்

- நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 2014/2015 பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்காக உணவு பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினாலும் நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்பின் பிரகாரம் 200,000 மெ.தொ. நெல் பதிவு செய்யப்பட்ட விவசாய அமைப்புகளிலிருந்து மாவட்ட செயலாளர்களின் ஊடாக கொள்வனவு செய்யும் பொருட்டு தேவையான நிதி ஏற்பாடுகளை பொது திறைசேரியினால் உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.