• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தோட்டத்துறை தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் மீது வீடுகளை நிருமாணித்தல்

- ஹட்டன் உட்பட நுவரெலிய மாவட்டம், பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, காலி மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் தோட்டத்துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்காக 20,000 தனி வீடுகளை நிருமாணிப்பதற்கும் முதற் சந்தர்ப்பத்தில் தேவையான புதிய தனி வீடுகளை வழங்க முடியாமற்போகும் குடும்பங்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கை நிலையை உருவாக்கும் பொருட்டு தற்காலிக ஏற்பாடொன்றாக ஏற்கனவேயுள்ள 30,000 லயன் அறைகளின் கூரைகளை புதிதாகப் பொருத்துவதற்கும் அவற்றை விருத்தி செய்வதற்காகவும் இந்திய அரசாங்கத்திடமிருந்து சுமார் 260 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையொன்றை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.