• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள கமத்தொழில் துறைசார்ந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் 2014 ஆம் 2015 ஆம் ஆண்டுகளுக்கான செயற்பாட்டுத் திட்டத்தை கைச்சாத்திடுதல்

- இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள கமத்தொழில் துறைசார்ந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையின் மூலம் உடன்பட்டுள்ளவாறு இருதரப்பினரதும் உடன்பாட்டின் மீது ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காக இரு ஆண்டு செயற்பாட்டுத் திட்டமொன்றை கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக அதிமேதகைய சனாதிபதி அவர்களின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த செயற்பாட்டுத் திட்டத்தை கைச்சாத்திடும் பொருட்டு பதில் நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு (திருமதி) அனோமா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.