• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியன்றுக்கு 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற அறிக்கை

- 100 நாள் வேலைத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலை மேற்பார்வை செய்வதற்காக அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட மேற்பார்வைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்னேற்ற அறிக்கையானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் பல்வேறுபட்ட சலுகைகள் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையும்கூட அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டங்களைத் திருத்துவதன் மூலமோ அல்லது புதிய சட்டமூலங்களை அங்கீகரிப்பதன் மூலமோ நடைமுறைப்படுத்த வேண்டிய பிரேரிப்புகளுக்குரிய வரைவுச் சட்டங்களுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, விசேட வழிமுறைகளின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கண்டறியப்பட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு எடுக்கப்படவேண்டிய ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்டறிந்து உரிய காலப்பகுதிக்குள் குறித்த பணிகளை நிறைவேற்ற வேண்டுமென ஒவ்வொரு அமைச்சுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.