• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கொழும்பு நகரத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேறு இடத்திற்கு மாற்றுதல் மற்றும் அகற்றுதலை மீளாய்வு செய்யும் குழு

- முன்னைய பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சினால் 2010 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய நகர புனரமைப்புக் கருத்திட்டத்தினதும் கொழும்பு நகரத்தின் வேறு செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவும் கொழும்பு நகரத்திற்குள் குறைந்த வசதிகளுடன் கூடிய வீடுகளில் வசித்த சுமார் 68,000 குடும்பங்களை அவற்றிலிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த செயற்பாட்டின் போது பாதிக்கப்பட்டவர்களினாலும் இது தொடர்பில் ஊக்கமுள்ள பிரசைகளினாலும் செய்யப்பட்ட பெருமளவிலான முறைப்பாடுகள் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுக்கு கடந்த இரண்டு (02) வார காலத்திற்குள் கிடைத்துள்ளன. ஆதலால் நகர அபிவிருத்தி அதிகாரசபையினூடாக மேற்கொள்ளப்பட்ட கொழும்பு நகரத்தில் வதிந்திருந்த குடும்பங்களை அப்புறப்படுத்தல், அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தல் சம்பந்தமான சகல நடவடிக்கைகளையும் மீளாய்வு செய்து நிவாரணம் கிடைக்க வேண்டியவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய துரித நிவாரணங்கள் உட்பட நீண்ட கால தீர்வுகள் உள்ளடக்கப்பட்ட சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக உரிய அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட தரப்பினர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இந்த உத்தியோகத்தர்கள் குழுவின் பணிகளை பின்வரும் மூன்று (03) அமைச்சர்களைக் கொண்ட குழுவின் மேற்பார்வையின் கீழ் செய்யப்பட வேண்டுமெனவும் மேலும் தீர்மானிக்கப்பட்டது:

* மாண்புமிகு ரவி கருணாநாயக்க அமைச்சர்;
* மாண்புமிகு ரோசி சேனநாயக்க இராஜங்க அமைச்சர்; அத்துடன்
* மாண்புமிகு இரான் விக்கிரமரத்ன பிரதி அமைச்சர்.