• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமைச்சுக்களின் வழமையான செலவுகளுக்குப் புறம்பாக செய்யப்பட்டுள்ள கொடுப்பனவுகள்

- சனாதிபதி தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட திகதியிலிருந்து சனாதிபதி தேர்தல் முடிவடைந்த திகதி வரையிலான காலப்பகுதியில் பல்வேறுபட்ட அமைச்சுக்களினால் வழமையாக செய்யப்படும் செலவுகள் தவிர உறப்பட்ட ஏனைய செலவுகள் தொடர்பில் அமைச்சர்கள் ஒவ்வொருவரினாலும் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் நியாயமற்றதென தெரியவரும் சகல கொடுப்பனவுகளையும் நிறுத்துமாறு தங்களுடைய அமைச்சுச் செயலாளர்களுக்கு பணிப்பு விடுக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் முக்கியமாக ஊடக நிறுவனங்களுக்கு பாரிய அளவில் செய்யப்பட்டுள்ள கொடுப்பனவுகள் பற்றியும் வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக் கொள்வதற்காக உறப்பட்டுள்ள செலவுகள் பற்றியும் ஆராய வேண்டுமெனவும் கூடத் தீர்மானிக்கப்பட்டது.