• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 வெசாக் பண்டிகையை நடாத்துதல்

- 2015 வெசாக் நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைவாக தேசிய, மாகாண மற்றும் பிரதேச ரீதியில் நடாத்தப்படும் சமய, சமூக, கலாசார நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் பொருட்டு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை நியமிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* வணக்கத்துக்குரிய அத்துரலியே ரத்தன தேரோ அவர்கள் (பா.உ.);
* புத்தசாசன அமைச்சர் - (தலைவர்);
* மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமை மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர்;
* உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர்;
* கல்வி அமைச்சர்;
* வெகுசன ஊடக, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்;
* கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்; அத்துடன்
* பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.