• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நடாத்தப்படும் சருவதேச கிரிக்கட் போட்டிகளின் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி / ஔி பரப்பு உரிமை

- இலங்கையிலோ அல்லது வெளிநாடொன்றிலோ நடாத்தப்படும் சருவதேச கிரிக்கட் போட்டிகளின் ஒலி / ஔி பரப்பு உரிமை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் மாத்திரம் கையளிப்பதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் 2011 ஆம் ஆண்டில் விளையாட்டுத்துறை சார்ந்த தனியார் தொலைக்காட்சி அல்லது வானொலி அலைவரிசையொன்றுக்கு வழங்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் அரசாங்க ஊடக நிறுவனங்கள் இரண்டிற்கும் ஏற்பட்ட நிதி ரீதியிலான நட்டம் பற்றியும் இந்த உரிமப்பத்திரத்தைப் பெற்றிருந்த CSN நிறுவனத்தின் ஒலிபரப்புகள் நாடுமுழுவதும் ஒலி / ஔி பரப்பப்படாமை பற்றியும் கிரிக்கட் போட்டி தொடர்பிலான வருணனை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் செய்யப்படாமை பற்றியும் தூர பிரதேசங்களைச் சேர்ந்த இரசிகர்களுக்கு இதனால் அநீதி நிகழ்ந்துள்ளமை பற்றியும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அமைச்சரவையினால் இந்த நிலைமையை சீர்செய்வதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும் பொருட்டு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டது.