• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிலை மற்றும் மதுசாரம் சம்பந்தமான தேசிய அதிகாரசபை சட்டத்தின் 34 ஆம் பிரிவைத் திருத்துதல்

- புகையிலை உற்பத்திகள் உள்ளடக்கப்பட்ட பொதிகளில் இந்த உற்பத்திகளை பயன்படுத்துவதன் காரணமாக உருவாகக் கூடிய தீங்கிழைக்கும் விளைவுகள் பற்றி சுகாதார ரீதியிலான எச்சரிக்கை செய்யும் தகவல்களை உள்ளடக்குவதற்கும் உரிய பொதிகளின் வெளிப்பகுதியில் 80 சதவீதம் அத்தகைய எச்சரிக்கை செய்யும் தகவல்களை காட்சிப்படுத்துவதையும் கட்டாயமாக்குவதற்கு இயலுமாகும் வகையில் புகையிலை மற்றும் மதுசாரம் சம்பந்தமான தேசிய அதிகாரசபை சட்டத்தின் 34 ஆம் பிரிவை திருத்தும் பொருட்டு மாண்புமிகு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் தேசிய நலனின் பொருட்டு அவசர சட்டமொன்றாக கருதி அரசியலமைப்பின் 122 ஆம் உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேற்போந்த திருத்தங்களுக்கு மேலதிகமாக இந்த சட்டத்திற்கு அமைவாக நுகர்வோருக்கு அறியச் செய்யும் பொருட்டு படம்சார்ந்த எச்சரிக்கைகள் மூலம் நடவடிக்கை எடுக்காத சந்தர்ப்பங்கள் தொடர்பில் நிதிச் சட்டத்தில் விதித்துரைக்கப்பட்டிருந்த 2,000/- ரூபா தண்டப்பணமும் ஒரு (01) வருட சிறைத்தண்டனையும் என்பதை 50,000/- ரூபா தண்டப்பணமும் ஒரு (01) சிறைத்தண்டனையும் என்னும் விதத்தில் திருத்துவதற்கும் இதற்காக தாபிக்கப்பட்டுள்ள அதிகாரசபையினால் சிபாரிசு செய்யப்படும் சுகாதார ரீதியிலான படம்சார்ந்த எச்சரிக்கைகளை ஆறு (06) மாதங்களுக்கு ஒருதடவை மாற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.