• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துதல்

2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டிற்கான நிதி ஏற்பாடுகள் குறித்தொதுக்கப்பட்ட 60 அமைச்சுகளின் பணிகள் புதிய அரசாங்கத்தின் கீழ் 31 அமைச்சுகளினதும் 10 இராஜாங்க அமைச்சுகளினதும் கீழ் செயற்படுகின்றமையினால் முன்னைய 60 அமைச்சுகளின் கீழ் குறித்தொதுக்கப்பட்டிருந்த நிதி ஏற்பாடுகளை புதிய அமைச்சுக்களின் விடய நோக்கெல்லைகளுக்கு அமைவாக குறித்தொதுக் குவதற்கும் புதிய அரசாங்கத்தின் "100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் உடனடி நிவாரண நிகழ்ச்சித்திட்டங்கள்" சார்பில் தேவைப்படும் நிதி ஏற்பாடுகளை ஏற்பாடு செய்வதற்குமாக 2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்காக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் தேசிய நலனின் பொருட்டு அவசர சட்டமொன்றாக கருதி அரசியலமைப்பின் 122 ஆம் உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.